மு.க.ஸ்டாலினுக்கு தில் இருந்தால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் ‘பாசிச பாஜக அரசு ஒழிக என்று முழக்கமிட முடியுமா …!தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவால்

Default Image

தமிழக பாஜக தலைவர் தமிழிசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.

தூத்துக்குடிக்கு விமானத்தில் வருகை தந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசையை விமானத்தில் வைத்து அவருக்கு எதிராக பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷமிட்டார் சோபியா என்ற பெண்மணி எனவே சோபியா மீது நடவடிக்கை எடுக்க கோரி விமான நிலைய போலீசாரிடம் பாஜக தலைவர் தமிழிசைசவுந்தராஜன் மனு அளித்தார்.இதனையடுத்து, சோபியாவை கைது செய்த போலீசார், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம் தமிழிசை முன் முழக்கமிட்ட சோபியாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் என்று உத்தரவு பிறப்பித்தது.

பின் விமானத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கமிட்ட பெண் சோபியா மீது ஜாமினில் வரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.மேலும் இவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Image result for tamilisai mk stalin

கைதான சோபியாவின் ஜாமின் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.பின்னர் மாணவி சோபியாவுக்கு ஜாமீன் வழங்கியது தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.நிபந்தனைகள் எதுவும் விதிக்காமல் ஜாமின் வழங்கியது. மேலும் சோபியாவுக்கு அவரது பெற்றோர்கள் அறிவுரை வழங்கும் படியும் நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.பின்னர் கைதான மாணவி சோபியா ஜாமீனில் விடுதலையானார்.

Image result for tamilisai plane

இந்நிலையில் சோபியாவின் கைதை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில்,ஜனநாயக விரோத கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும். அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கின்றேன்.பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக என்று கூறினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக.,வை சேர்ந்த நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் மூலமாக கருத்து தெரிவித்தார்.

அதில் பதிவிட்ட்து  ,ஸ்டாலினுக்கு துணிவிருந்தால்’பாசிச பாஜக அரசு ஒழிக’ என்று,பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் லண்டனுக்கு செல்லும் போது கோஷமிடுவாரா என்று கேள்வி எழுப்பினார்.

இவரது இந்த பதிவிற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதில் கருத்து ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் சபாஷ் சரியான கேள்வி! தெம்பு திராணியிருந்தால்????பேச்சுரிமை காட்டட்டுமே? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்