கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் சில அரசியல் கட்சிகள் மட்டும் தேவையற்ற விமர்சனம் செய்வதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.நாகை சார் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த சமையல் கூடத்தை அமைச்சர்கள் தங்கமணி,வேலுமணி,பெஞ்சமின் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரியும் உடனிருந்தார்.
நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு தேவையான உணவுகள் அந்தந்த மையங்களில் தயாரிக்கப்பட்டாலும் நாகை ஒருங்கிணைந்த மையத்தில் தயாராகும் உணவு மாவட்டம் முழுவதும் அனுப்பப்படுகிறது.இந்த நிலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமாக தயாரித்து அனுப்பப்படுகிறதா என்பதை அமைச்சர்கள் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தனர். உணவு தயாரிப்பதற்காக வாங்கப்பட்ட காய்கறி,அரிசி போன்றவையும் தரமாக இருக்கிறதா எனவும் அவர்கள் கேட்டறிந்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, கஜா புயல் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் சில அரசியல் கட்சிகள் தேவையற்று அரசியல் செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.
DINASUVADU.COM
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…