முழுமையான வெற்றியை தாருங்கள் : மு.க.ஸ்டாலின்
- முழுமையான வெற்றியை கொண்டாடுவதே நமது இலக்கு என என்று தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்கிவருகின்ற நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அனைத்து கட்சிகளும் மிக தீவிரமாக பிரச்சாரம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறுகையில், மத்தியில், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட உழைப்பை தாருங்கள் என்றும், முழுமையான வெற்றியை தாருங்கள் என்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், 40க்கு 40, 18க்கு 18 என 100 விழுக்காடு வெற்றிக்காக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என கூறியுள்ளார். முழுமையான வெற்றியை கொண்டாடுவதே நமது இலக்கு என என்று தெரிவித்துள்ளார்.