மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,தமிழகத்திற்குரிய நிதியை முறையாக அளிக்க வேண்டும் என்று மத்திய நிதிக்குழுவுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி தொடர்பாக நிதிக்குழுத் தலைவர் என்,கே.சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2011ம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படுவதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளார் .மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகத்திற்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் அக்கடிதத்தில் விளக்கியுள்ளார். நிதிக்குழு மூலம் தொடர்ந்து தமிழகம் தண்டிக்கப்படுவதாக கவலை தெரிவித்துள்ள முதலமைச்சர், இதனால் தமிழக மக்களிடையே கடும் அதிருப்தி நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார்
இதனிடையே டெல்லி சென்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நிதிக்குழு தலைவரை நேரில் சந்தித்து தமிழகத்திற்கு உரிய நிதி ஒதுக்க வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனையும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து, தமிழ்நாட்டின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தருமாறு வேண்டுகோள் விடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், கிட்டதட்ட 7 ஆயிரம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டது குறித்து மத்திய நிதிக்குழுவிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…