முன் கூட்டிய முக்கொம்பு அணை உடையாமல் தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?டி.டி.வி.தினகரன்
முன் கூட்டிய முக்கொம்பு அணை உடையாமல் தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு திருச்சியில் உள்ள முக்கொம்பு மேலணையில் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. திருச்சி – சேலம் சாலையில் வாத்தலை என்ற இடத்தில் முக்கொம்பு அணை உள்ளது.இந்த அணையில் உள்ள மதகுகள் அடித்துச் செல்லப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். 45 மதகுகளில் 8 மதகுகள் உடைந்ததால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.நேற்று முக்கொம்பு மேலணையில் மேலும் ஒரு மதகு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது முக்கொம்பு மேலணையில் மொத்தம் உள்ள 45 மதகுகளில் 6 முதல் 14 வரையிலான மதகுகள் உடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது குறித்து வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,முன் கூட்டிய முக்கொம்பு அணை உடையாமல் தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார்.இந்த பிரச்சினையில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
DINASUVADU