முன்விரோதம் காரணமாக சென்னையில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை!
முன்விரோதம் காரணமாக சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கண்ணகி நகரின் எழில் நகர் பகுதியைச் சேர்ந்த 28 வயதான விமல் என்பவர் நேற்று மாலை வீட்டில் இருந்துள்ளார். அவரது நண்பர்கள், நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் வீட்டிற்கு வந்திருந்து, விமலை அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
வீட்டை விட்டு வெளியில் சென்ற விமல், சுனாமி குடியிருப்பை ஒட்டியுள்ள ஏரிக்கரையில் வைத்து, வெட்டிக்கொல்லப்பட்ட தகவல் கண்ணகி நகர் காவல்துறையினருக்கு கிடைத்தது. நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்ட நிலையில், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.