முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா, 2016 செப்டம்பரில், உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு, இரண்டரை மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2016 டிசம்பர், 5ஆம் தேதி உயிரிழந்தார். இவரது மரணம் குறித்து, பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.இதையடுத்து, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த, முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப் பட்டதா, தவறுகள் ஏதேனும் நிகழ்ந்ததா என்பது குறித்து விசாரிக்க, ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
விசாரணை துரிதமாக நடந்து வந்த நிலையில், அதற்கு தடை விதிக்கப்பட்டது. கமிஷனின் உறுப்பினர்களுக்கு, மாநில அரசு ஊதியம் வழங்கி வருகிறது. எனவே, விசாரணைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை, நீதிமன்றம் விலக்கி கொள்ள வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.எம்.கான்வில்கர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, ‘தமிழக அரசின் மனு மீது, இரண்டு வாரத்திற்குள், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும்’ என, நீதிபதிகள்
உத்தரவிட்டு, வழக்கை, அடுத்த மாதம், 12க்கு ஒத்தி வைத்தனர்.
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…