முன்னாள் கவுன்சிலர் தாக்கியதாக கடலூர் இளநிலை பொறியாளர் புகார்!
முன்னாள் கவுன்சிலரான கந்தன் என்பவர் கடலூரில் தன்னை தாக்கியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கடலூர் நகராட்சி இளநிலைப் பொறியாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் புகார் தெரிவித்துள்ளார்.
கடலூர் சரவணா நகரில் 56 லட்சம் ரூபாய் செலவில் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி தரமில்லாத வகையில் நடைபெறுவதாக ஒப்பந்ததாரர் ரமேஷ் என்பவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் கடலூர் நகர அ.தி.மு.க. துணைச் செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான கந்தன், ஒப்பந்ததாரர் ரமேஷூக்கு ஆதரவாக தன்னிடம் தகராறில் ஈடுபட்டதாக ஜெயப்பிரகாஷ் நாராயணன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.