முன்னணி இயக்குனர் ஆர்.தியாகராஜன் திடீர் மரணம்..!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தாய் மீது சத்தியம்,அன்புக்கு நான் அடிமை, ரங்கா,உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கியவர் ஆர்.தியாகராஜன் , 75 வயதை கடந்த இவர் சென்னை பேரூரில் வசித்து வந்தார்.
இன்று காலை நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவரது உடல் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.அவரது அடக்கம் நாளை நடைபெறவுள்ளது.இவர் பிரபல இயக்குனரும், பிரபல தயாரிப்பாளருமாகிய சாண்டோ சின்னப்பத் தேவரின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.