கலைஞர் கருணாநிதி அரசியலில் எவ்வளவு பெரிய சாணக்கியர் என்பது பற்றி நாம் அறிந்ததே. அதே போல தனது தமிழ் இலக்கியத்தை தனது எழுத்தின் மூலம் சாமானியனுக்கு கடத்தியவர் கலைஞர்.
அவர் முதன் முதலாக தனது எழுத்துக்களை கோர்த்து மக்களுக்கு படைத்த முதல் நாடகம் பழனியப்பன். இந்த நாடகம் திருவாரூரூரில் 1944ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து 1947ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அறிமுகமான ராஜகுமாரி படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமானார். அதன் பின்னர் தனது தனித்துவமான தமிழின் மூலம் திரையுலகில் மெல்ல மெல்ல தமிழ் திரையுலக தமிழையும் சேர்த்து வளர்த்து வந்தார் எனபதே உண்மை!
புரட்சி திலகம் எம்ஜிஆருக்கு மந்திரகுமாரி மலைக்கள்ளன் என இரு வெற்றி படங்களையும், நடிகர் திலகம் சிவாஜிக்கு முதல் படமே முத்திரை பதிக்கும் வண்ணம் வசனத்தை எழுதி இந்திய திரையுலகையே உற்றுநோக்க வைத்தார் கலைஞர். பிறகு சிவாஜிக்கு மனோகரா எனும் படத்தையும் தனது வசனத்தால் கவனிக்க வைத்தவர் கலைஞர் கருணாநிதி.
1947 முதல் 2011 வரை சுமார் 64 திரைப்படங்களுக்கு தனது தமிழை கதை, வசனம், பாடல்கள் என தனது எழுத்து மூலம் மெருகேற்றியவர் கலைஞர் கருணாநிதி. கடைசியாக ஸ்ரீ ராமானுஜர் எனும் நாடகத்திற்கு வசனம் எழுதுகையில் அந்த இளைஞனுக்கு வயது 92 மட்டுமே.
இது போக புத்தகங்கள் வாயிலாகவும் தனது தமிழ் வேட்கையை தீர்த்துக்கொள்ள முயற்சித்தவர் கலைஞர். இனியவை 20, கலைஞரின் கவிதை மழை என 150க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். நெஞ்சுக்கு நீதி எனும் தலைப்பில் தனது சுயசரிதையை குங்குமம் மற்றும் முரசொலியில் எழுதியுள்ளார்.
கலைஞர் கருணாநிதி எனும் நாம் கூப்பிட காரணமாயிருந்த முக்கிய நபர் நடிகவேள் எம்.ஆர்.ராதா தான். அவர்தான் கருணாநிதிக்கு கலைஞர் எனும் பட்டத்தை வழங்கியுள்ளார். மக்கள் திலகம் எம்ஜிஆர் எப்போதும் கருணாநிதியை ஆண்டவரே என்றுதான் அழைப்பாராம்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…