முதல்வர் பழனிசாமி அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க பிரதமர் மோடிக்கு கடிதம்!

Published by
Venu
பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் விதமாக உள்ளதால் அதனை நிறுத்தி வைக்க வேண்டும் என  கடிதம் எழுதியுள்ளார்.
மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீடு தொடர்பாக  பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில், மத்திய அரசு அணைகள் பாதுகாப்பு மசோதா ஒன்றை தயாரித்தது. இந்த மசோதாவுக்கு கடந்த புதன் கிழமை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், இந்த மசோதா மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் விதமாக உள்ளதால் மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
இந்த மசோதாவின் படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் ஒரே மாதிரியான அணைப் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க முடியும். தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தை அமைக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்த ஆணையம் நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது, அது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.
ஒரு மாநிலத்துக்கு சொந்தமான அணை, மற்றொரு மாநிலத்தில் அமைந்திருத்தால் மாநில அணை பாதுகாப்பு அமைப்பின் பணிகளையும், தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் மேற்கொள்ளும். இதன் மூலம் அணை தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகள் தீர்க்கப்படும்.
மாநில அரசுகள் மாநில அளவில் அணைகள் பாதுகாப்பு குழுவை அமைக்கவும் இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நமது நாட்டில் உள்ள வல்லுநர்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளைச் சேர்ந்த அணைப் பாதுகாப்பு வல்லுநர்களுடனும் ஆலோசிக்கப்பட்டு இந்த மசோதா இறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
மாநில அரசுகளின் கருத்துகளை கேட்ட பிறகே இந்த மசோதாவை சட்டமாக்க வேண்டும் எனவும் முதல்வர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Published by
Venu

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

6 hours ago