முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!போலீஸ் விசாரணை தீவிரம்!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் மர்மநபர்களால் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள கிரீன் வேய்ஸ் இல்லத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லம் உள்ளது.இந்நிலையில் தற்போது முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் மர்மநபர்களால் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.இதனையடுத்து போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.