முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல் பிறந்தநாள்:அண்ணா,கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

சென்னை:இன்று தனது 69-வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா,கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மரியாதை.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தனது 69-வது பிறந்த நாளை முன்னிட்டு மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் அண்ணா ஆகியோரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளார்.
அதன்படி,சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மரியாதை செலுத்தியுள்ளார்.
அவருடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து,வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் திடலுக்கு சென்று முதல்வர் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் ஸ்டாலின் அவர்கள் இன்று கொண்டாடும் முதல் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025