முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார்.
அம்பாசமுத்திரம் வட்ட வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று நேரடி, மறைமுக பாசனப் பகுதிகளுக்கு கார் பருவ சாகுபடிக்கு வரும் 8-ஆம் தேதி முதல் செப்டமர் 20 வரை நீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
105 நாட்களுக்கு 554 புள்ளி 25 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து தேவைக்கு ஏற்பவும் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 756 புள்ளி 82 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்துள்ள அவர், விவசாயிகள் நீர் மேலாண்மை மூலம் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…