முதலமைச்சர் பழனிசாமி கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்னையில் இருந்து ரயிலில் நாகை புறப்பட்டார்.
கடந்த நவம்பர் 20 ஆம் தேதி கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் பாதியில் திரும்பினார் முதலமைச்சர் பழனிச்சாமி.புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களை மட்டும் ஆய்வு செய்து பாதியில் திரும்பினார்.மோசமான வானிலை காரணமாக முதலமைச்சர் பழனிச்சாமியின் பயணம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
புயல் பாதித்த நாகையை முதலமைச்சர் பழனிச்சாமி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்வார் என்று கூறப்பட்ட நிலையில், அங்கு மழை பெய்து வருவதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.மழையில் ஹெலிகாப்டரில் செல்ல முடியாது என்று பயணம் ரத்து செய்யப்பட்டது.இதனால் முதலமைச்சர் பழனிசாமி திருவாரூரிலிருந்து திருச்சிக்கு திரும்பி சென்றார்.
இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.அவர் கூறுகையில், கனமழை பெய்ததால் ஹெலிகாப்டரில் நாகை, திருவாரூர் செல்ல முடியாததால் திருச்சிக்கு திரும்பினேன். திருவாரூர், நாகையில் வேறு ஒரு நாளில் புயல் சேதங்களை ஆய்வு செய்வேன் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
இந்நிலையில் கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்னையில் இருந்து ரயிலில் நாகை புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி.எழும்பூரில் இருந்து காரைக்கால் விரைவு ரயில் மூலம் நாகை செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.
புயல் பாதித்த நாகை, திருவாரூர் பகுதிகளில் நாளை (நவம்பர் 28 ஆம் தேதி) முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்கிறார்.நாகையில் நாளை காலை 8 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி ஆய்வை தொடங்குகிறார்.பிரதாமபுரம், காமேஷ்வரம், விழுந்தமாவடி, வேட்டைகாரனிருப்பு, கோவில்புத்து, வானவன்மாதேவி, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், பெரியகுத்தகை, வேதாரண்யம், ஆதனூர், ஆயக்காரன்புலம், மருதூர் ஆகிய பகுதிகளில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளார்.
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…