முதலமைச்சர் பழனிசாமி கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய ரயிலில் நாகை புறப்பட்டார்…!

Default Image

முதலமைச்சர் பழனிசாமி கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்னையில் இருந்து ரயிலில் நாகை புறப்பட்டார்.

கடந்த நவம்பர் 20 ஆம் தேதி கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் பாதியில் திரும்பினார் முதலமைச்சர் பழனிச்சாமி.புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களை மட்டும் ஆய்வு செய்து பாதியில் திரும்பினார்.மோசமான வானிலை காரணமாக முதலமைச்சர் பழனிச்சாமியின் பயணம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

புயல் பாதித்த நாகையை முதலமைச்சர் பழனிச்சாமி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்வார் என்று கூறப்பட்ட நிலையில், அங்கு மழை பெய்து வருவதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.மழையில் ஹெலிகாப்டரில் செல்ல முடியாது என்று பயணம் ரத்து செய்யப்பட்டது.இதனால் முதலமைச்சர் பழனிசாமி திருவாரூரிலிருந்து திருச்சிக்கு திரும்பி சென்றார்.

இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.அவர் கூறுகையில், கனமழை பெய்ததால் ஹெலிகாப்டரில் நாகை, திருவாரூர் செல்ல முடியாததால் திருச்சிக்கு திரும்பினேன். திருவாரூர், நாகையில் வேறு ஒரு நாளில் புயல் சேதங்களை ஆய்வு செய்வேன் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

இந்நிலையில் கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்னையில் இருந்து ரயிலில் நாகை புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி.எழும்பூரில் இருந்து காரைக்கால் விரைவு ரயில் மூலம் நாகை செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.

புயல் பாதித்த நாகை, திருவாரூர் பகுதிகளில் நாளை (நவம்பர் 28 ஆம் தேதி) முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்கிறார்.நாகையில் நாளை காலை 8 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி ஆய்வை தொடங்குகிறார்.பிரதாமபுரம், காமேஷ்வரம், விழுந்தமாவடி, வேட்டைகாரனிருப்பு, கோவில்புத்து, வானவன்மாதேவி, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், பெரியகுத்தகை, வேதாரண்யம், ஆதனூர், ஆயக்காரன்புலம், மருதூர் ஆகிய பகுதிகளில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
ipl 2025 yuvraj singh
rahul gandhi helicopter
appam (1) (1) (1)
amaran ott release date
Actor Jayam Ravi - Aarti
A Man Died in Guindy Hospital