துணை-முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது.
பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , தனது மனசாட்சி கேள்வி எழுப்பியதால்தான் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்ததாகவும், அவர் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் பரபரப்பு தகவல்களைதெரிவித்தார்.
பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக பிரிந்து சென்றனர்.பன்னீர்செல்வம் அணி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்து கொண்டது.
பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .
இதனால் தினகரன் தானக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் பொதுச்செயலாளர் சசிகலா ஆவார்.
இந்நிலையில் தினகரன் மற்றும் ஓ.பி.எஸ்&ஈ.பி.எஸ் இடையே கடும் வர்தைப்போர் நடந்து வருகிறது.
அதற்கு ஏற்றாற்போல் மன்னார்குடியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை-முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசுகையில்,டி.டி.வி. தினகரன் தேர்தலில் 200 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என கூறுவது பகல் கனவு.டி.டி.வி. தினகரன் ஆர்.கே நகரில் பெற்ற வெற்றியை போல் வெற்றி பெறுவோம் என கூறுகிறார். ஆர்.கே நகர் வெற்றி, 20 ரூபாய் டோக்கனால் வந்த வெற்றி. ரூ.10 ஆயிரம் தருவதாக கூறி 20 ரூபாய் நோட்டை கொடுத்து ஏமாற்றியது, உலகத்தில் தினகரன் ஒருவர் மட்டும்தான். இந்த ஆட்சியை அகற்றும் தினகரனின் எண்ணம் அ.தி.மு.க தொண்டர்களிடம் பலிக்காது. அ.தி.மு.க தொண்டர்கள் அதை முறியடிப்பார்கள் என்று பேசினார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.ஆவர் கூறுகையில் ,என்னை தாக்கி பேசுகிறேன் என்கிற பெயரில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் என்னை தமிழகம் முழுவதும் பிரபலபடுத்துகிறார்.நான் மிரட்டி கையெழுத்து போட சொன்னதும், ஓ.பன்னீர்செல்வம் முதல் அமைச்சர் பதவியில இருந்தும் கையெழுத்து போட்டிங்கனா. என்ன பாத்தா அவ்ளோ பயம் இருக்குல என்று காட்டமாக பேசியுள்ளார்.
DINASUVADU
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…