முதலமைச்சர் காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் உடனடியாக காவிரி நீரைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்!தி.மு.க.
தி.மு.க. ,காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் உடனடியாக நீரைப் பெற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தில் காவிரி நீரை உரிய முறையில் பெற்று மேட்டூர் அணையில் தேக்கி வைத்ததால் மட்டுமே 2001, 2011 ஆகிய ஆண்டுகளில் குறித்த காலத்தில் மேட்டூர் அணையை திறந்து விட முடிந்தது என்று அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதை வசதியாக மறந்து விட்டதாகவும் துரைமுருகன் குறை கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அமைக்கப்படும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் 113 நாட்களாக காவிரி நீரைப் பெறாமல், மேட்டூர் அணையை ஜூன் 12-ல் திறக்க முடியாது என்று முதலமைச்சர் கூறுவது வேதனையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் உடனடியாக காவிரி நீரைப் பெற மத்திய அரசுக்கு முதலமைச்சர் தேவையான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.