முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரம்ஜானை இன்புறக் கொண்டாடி மகிழ வாழ்த்து!

Default Image

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,தமிழகத்தில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் நிலையில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியப் பெருமக்கள் புனித ரமலான் மாதத்தில் முப்பது நாட்களும் நோன்பிருந்து, எல்லோரிடமும் அன்பு பாராட்டி, ஏழை எளியவர்களுக்கு உணவு அளித்து, இறை சிந்தனையை மனதில் நிறுத்தி, அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன், இறைவனை தொழுது, ரம்ஜான் திருநாளை உற்சாகமாக கொண்டாடுவதாகக் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு நலத்திட்டங்களை இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வு மேன்மையுற தமிழக அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருவதாக தமது வாழ்த்தில் குறிப்பிட்ட முதலமைச்சர், ரம்ஜான் பெருநாளில், உலகில் அமைதி நிலவி, இன்பம் பெருகி, அன்பு தழைக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்