முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் பிரம்மகுமாரிகள் அமைப்பினரின் அகில இந்திய கண்காட்சி பேருந்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,சென்னையில் பிரம்மகுமாரிகள் அமைப்பினரின் அகில இந்திய கண்காட்சி பேருந்து பிரச்சாரத்தை தொடக்கி வைத்தார்.
இளைஞர்களிடையே ஒழுக்கங்களை போதிக்கவும், அமைதியான எதிர்காலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ”எனது பாரதம் பொன்னான பாரதம்” என்ற தலைப்பில் பிரம்மகுமாரிகள் அமைப்பினர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அகில இந்திய கண்காட்சி பேருந்து பிரச்சாரத்தை தொடங்கியது. ஒழுக்கம், அமைதியை வலியுறுத்தி துண்டுபிரசுரங்களும் வினியோகிக்கப் படுகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கி வைத்த இந்த பேருந்து பிரச்சாரம், பல்வேறு மாநிலங்களைக் கடந்து, மே 1-ஆம் தேதி கன்னியாகுமரி வந்து சேர்ந்தது. இன்று சென்னை வந்துள்ள கண்காட்சி பேருந்து பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பசுமைவெளிச்சாலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.