முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி சம்பவம் தொடர்பான அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி சம்பவம் தொடர்பான அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அறிக்கையில், போராட்டக்குழுவினருடன் சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் சேர்ந்ததால் பிரச்சனையில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் சிலர் கலவரத்தில் ஈடுபட்டனர். கண்ணீர் புகைகுண்டு, தடியடிக்கும் கலைந்து செல்லாத காரணத்தினால் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
அமைச்சர்கள் நேரில் சென்று காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.தூத்துக்குடி சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.