முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதகையில் 122வது மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீலகிரி மாவட்டம் உதகையில், 122வது மலர் கண்காட்சியை இன்று தொடங்கி வைக்கிறார்.உதகையில் ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, அரசு தாவரவியல் பூங்காவில் 122வது மலர் கண்காட்சி இன்று தொடங்கி ஐந்து நாட்கள் நடக்கிறது. 150க்கும் மேற்பட்ட ரகங்களில், சுமார் 35 ஆயிரம் தொட்டிகளில் பல்லாயிரக்கணக்கான மலர்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தொடக்கி வைக்க இருக்கிறார்.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக, இம்முறை பல ஆயிரம் மலர்களால் பிரம்மாண்ட மேட்டூர் அணை, சென்னை வள்ளுவர் கோட்டம் உள்ளிட்டவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பூங்கா முழுவதும் கண்கவர் வண்ண விளக்குகளால் காட்சியளித்ததை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.