முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அசாமில் உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,அசாம் மாநிலத்தில் பாதுகாப்பு பணியின் போது உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அசாம் மாநிலம் இடுலி மற்றும் கபாங் இடையிலான பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, மதராஸ் ரெஜிமெண்டில் ஹவில்தாராக பணியாற்றிய நெல்லையைச் சேர்ந்த ராணுவ வீரர் செல்வகுமார் வீரமரணமடைந்தார். செல்வகுமாரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது குடும்பத்தினருக்கு 20 லட்ச ரூபாய் இழப்பீடு தொகையை உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.