முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருநெல்வேலி மாவட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடனா, அடவிநயினார்கோவில், இராமநதி, கருப்பாநதி, கொடுமுடியாறு அணைகளிலிருந்து பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்து விடத் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சரின் அறிக்கையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுத் திருநெல்வேலி மாவட்டத்தில் கடனா, அடவிநயினார்கோவில், இராமநதி, கருப்பாநதி அணைகளிலிருந்து கார்ப் பருவ நெல் பயிரிடுவதற்காக ஜூன் 22முதல் அக்டோபர் 24வரை 125நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இதனால், அம்பாசமுத்திரம், செங்கோட்டை, கடையநல்லூர் வட்டங்களில் எட்டாயிரத்து 225 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதேபோல் திருநெல்வேலி மாவட்டம் கொடுமுடியாறு அணையிலிருந்தும் ஜூன் 22 முதல் அக்டோபர் 24வரை 125 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இதனால், நாங்குனேரி, இராதாபுரம் வட்டங்களில் ஐயாயிரத்து 781ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.