முதன்முறையாக அண்ணாவின் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை…!

Default Image

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திமுக தலைவராக மு.க.ஸ்டாலினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பொதுச்செயலாளர் க.அன்பழகன்.இதனால் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.அதேபோல் திமுக பொருளாளராக துரைமுருகன் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டார்.

மேலும் திமுக செயல் தலைவர் பதவிக்கான கட்சி விதி பிரிவு 4 நீக்கப்பட்டதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள  அண்ணா நினைவு இல்லத்தில் தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்