முக ஸ்டாலினின் அதிரடி ” பிஜேபி க்கு எதிராக தீர்மானம் ”
சென்னை:
திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைப்பெற்றது.முக அழகிரி பேரணி நடத்தியதை தொடர்ந்து திமுக நடத்தும் கூட்டம் என்பதால் தமிழக அரசியலில் இது கூடுதல் கவனம் பெற்றது.இன்று காலை தொடங்கிய இந்த கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக இக்கூட்டத்தில்., ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரங்கள் பின்வருமாறு…
- தமிழகத்தை காவிமயமாக்கும் மத்திய பாஜகவின் கனவுகளை நிராகரித்து வீழ்த்துவோம்.
- அதிமுக-வின் ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்.
- வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் வழிமுறையை பின்பற்றுவோம்.
- கடைமடைக்கு செல்லாமல் காவிரி நீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுப்போம்.
- பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
- பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து செப்டம்பர் 10-ஆம் நாள் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
- குட்கா முறைகேட்டில் சிக்கியுள்ள அமைச்சர், டிஜிபியை பதவி நீக்க வேண்டும்.
- அதிமுக அரசைக் கண்டித்து செப்டம்பர் 18-ஆம் நாள் தமிழகம் முழுவதும் திமுக போராட்டம் நடத்தும்.
ஆகிய 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
DINASUVADU