திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். கடந்த 6ம் தேதி தனது மனைவி ஜோதியுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு வந்து தனது மனைவி 3வதாக கர்ப்பமாகியுள்ளதாகவும், கருக்கலைப்பு செய்யும்படி தெரிவித்துள்ளார். இதற்கு மறுத்த பெண் டாக்டரை செல்போனில் படம் பிடித்து அதை முகநூலில் ஆபாசமான கருத்துக்களுடன் விஜயகுமார் பதிவு செய்துள்ளார். இதையடுத்து விஜயகுமாரை திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைதுசெய்தனர். இதற்கிடையே முகநூலில் டாக்டர் போட்டோ வெளியானதை கண்டித்தும், மருத்துவர்கள் பணி பாதுகாப்பு சட்டம் 48ன் படி விஜயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி, கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனை டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் சிகிச்சை பெறமுடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதற்கிடையில் இன்று காலை முகநூலில் போட்டோ பதிவிட்டதால் பாதிக்கப்பட்ட பெண் டாக்டர், தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை மருத்துவமனை அனுமதித்து திவீர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…