முக்கொம்பு அணையில் உடைந்த 9 மதகுகள்…! முதலமைச்சர் பழனிசாமி இன்று பார்வையிடுகிறார்…!
முதலமைச்சர் பழனிசாமி திருச்சி முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் உடைந்த பகுதியை இன்று பார்வையிடுகிறார்.
நேற்று முன்தினம் இரவு திருச்சியில் உள்ள முக்கொம்பு மேலணையில் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. திருச்சி – சேலம் சாலையில் வாத்தலை என்ற இடத்தில் முக்கொம்பு அணை உள்ளது.இந்த அணையில் உள்ள மதகுகள் அடித்துச் செல்லப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். 45 மதகுகளில் 8 மதகுகள் உடைந்ததால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.நேற்று முக்கொம்பு மேலணையில் மேலும் ஒரு மதகு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது முக்கொம்பு மேலணையில் மொத்தம் உள்ள 45 மதகுகளில் 6 முதல் 14 வரையிலான மதகுகள் உடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி திருச்சி முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் உடைந்த பகுதியை இன்று பார்வையிடுகிறார்.மேலும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

DINASUVADU