மீனவர்களின் மறுவாழ்வுக்கு நிதி ஒதுக்கீடு கோரிய வழக்கு…உயர் நீதிமன்றம் புது உத்தரவு…!!
இலங்கை ராணுவத்தால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் மறுவாழ்வுக்கு, நிதி ஒதுக்கீடு செய்யக் கோரிய மனுவுக்கு, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா – இலங்கை இடையில் பாக் ஜலசந்தியில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கடந்த 1983 முதல் 2013 வரை 111 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 439 மீனவர்கள் காயமடைந்துள்ளனர். பலியான மீனவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்த மீனவர்களுக்கும் மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுக்க, நிதி ஒதுக்க வேண்டும் என மீனவர்கள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நிதி ஒதுக்குவது தொடர்பாக, ஜனவரி 10-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
dinasuvadu.com