மீண்டும் வெடித்தது போராட்டம்…!

Default Image

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று  {திங்கள்} முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக ஜாக்டோ- ஜியோ {ஆசிரியர்கள்} கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி இன்று ஜாக்டோ- ஜியோ {ஆசிரியர்கள்} தங்களது போராட்டத்தை தொடங்கினர்.

Image result for ஜாக்டோ- ஜியோஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகள்:-

* அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்,

* 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்,

* அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்,

* அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்,

* சிறப்பு காலமுறை ஊதியம் பெறும், சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

அரசு ஆசிரியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதால், நாளை தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு படம் நடத்த ஆசிரியர்கள் இல்லமால், மாணவர்களின் படிப்பு பாதிப்பு ஆகும். எனவே தமிழக அரசு இந்த பிரச்சனைக்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும். இதுவே அணைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பு.

முன்னதாக, ஜாக்டோ- ஜியோ அமைப்பினர், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் போராட்டம் செய்தனர். அப்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பேச்சுவார்த்தை நடத்தி தோல்வியடைந்தது. பின் கடந்த மாதம் கூட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அரசுக்கு மீண்டும் கோரிக்கை வலியுறுத்து தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

ஆளும் இந்த தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தாத ஒரே துறை காவல் துறை மட்டும் தான். அவர்களும் விரைவில் நடத்தலாம். அப்படி நடந்தாலும் ராணுவத்தை விட்டு அடக்கும் அளவிற்கு மத்திய அரசு, தமிழக அரசுக்கு பக்கபலமாக இருந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
2025 jallikattu Competition
RoadAccident
bank robbry
Arunvijay Bala
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer