மீண்டும் முறைப்படி ஆலையைத் தொடங்குவோம்…!!வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால்..!!

Published by
kavitha

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால், சுற்றுச்சூழல் கேடு, மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது, ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனக் கோரி கடந்த 100 நாட்களாக ஆலையை அருகே வசிக்கும் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர் கடந்த 22-ம்தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தின் போது மக்களுக்கும், போலீஸாருக்கும் ஏற்பட்ட மோதலில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியாகினர். இந்தச் சம்பவத்துக்கு நாடு முழுவதும் பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன, பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இது குறித்து வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில், 11 பேர் போலீஸாரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் துரதிருஷ்டவசமானது, எதிர்பாராதவிதமாக நடந்துவிட்டது. இந்தச் சம்பவத்தை கேள்விட்டு மிகுந்த மனவருத்தமும், வேதனையும் அடைந்தேன். உறவுகளை இழந்துவாடும் மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறேன்.

மக்களின் விருப்பத்தோடு ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து நடத்த விரும்புகிறோம். நீதிமன்றத்தில் இருந்தும், தமிழக அரசிடமும் இருந்து அனுமதி கிடைத்தவுடன் மீண்டும் முறைப்படி ஆலையைத் தொடங்குவோம். தற்போது ஆண்டு பராமரிப்பு பணிக்காக ஆலை மூடப்பட்டுள்ளது.

 

எங்கள் நிறுவனம் நீதிமன்றத்தின், மாநில அரசின் விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்றிச் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி மக்களின் மிகப்பெரிய வளர்ச்சி எங்களுடையது என்பதை அங்கிருக்கும் மக்களிடம் நாம் உறுதி செய்து இருக்கிறோம். ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து நடத்த விரும்புகிறோம். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், தூத்துக்குடி, தமிழகத்தின் வளர்ச்சியையும் நாங்கள் உறுதி செய்து இருக்கிறோம். நாங்கள் இந்தியாவின் சட்டத்தை மதிக்கிறோம். தூத்துக்குடியில் நடந்த சம்பவங்கள் எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது என மீண்டும் தெரிவிக்கிறேன் என கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Recent Posts

சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஷாக் ! கொல்கத்தா அணியில் அலசோகராக சேர்ந்தார் டுவைன் பிராவோ!

சென்னை : மேற்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜமாபவனான டுவைன் பிராவோ ஐபிஎல் தொடரில் முதலில் மும்பை அணிக்காக விளையாடி…

6 mins ago

45 மிமிடங்கள்., தமிழக கோரிக்கைகள்.! பிரதமர் மோடி – மு.க.ஸ்டாலின் சந்திப்பு.!

டெல்லி : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நேரில் சந்தித்துள்ளார்.…

25 mins ago

எம்-பாக்ஸ் தடுப்பு பணிகள்: மாநிலங்களுக்கு பறந்தது மத்திய அரசு கடிதம்!

டெல்லி : கேரளாவில் அண்மையில் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட இளைஞருக்கு அதன் புதிய வகையான கிளேட் 1 வகை…

27 mins ago

“எங்கு தொடங்கும் எங்கு முடியும்”…கடைசி போட்டியில் கண்கலங்கிய டுவைன் பிராவோ!!

சென்னை : வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவர் டுவைன் பிராவோ. தன்னுடைய விளையாட்டால் மட்டும் ரசிகர்களை…

35 mins ago

துப்பாக்கி கலாச்சாரத்திற்கு புதிய சட்டம்! ஜோ பைடன் அதிரடி!

அமெரிக்கா : முன்பை விட சமீப காலத்தில் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் என்பது வளர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் தற்போது…

1 hour ago

முதல் நாள்., முதல் கையெழுத்து.! அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி..,

சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த 2023 ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.…

1 hour ago