தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பேசியதற்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
வரும் 30 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நினைவேந்தல் கூட்டம் நடக்கிறது. ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்‘ என்ற தலைப்பில் நடக்கும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள இந்தியாவிலிருந்து பெரும் தலைவர்கள் பலரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவர்தான் பாஜகவின் தலைவர் அமித் ஷா. கொள்கை ரீதியாக நேர் எதிர் துருவங்களை கொண்ட திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ஒன்று சேர்கிறது என்ற ரீதியில் அரசியல் விமர்சகர்கள் இந்த நினைவேந்தல் கூட்டத்தை பார்த்து வருகின்றனர்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், புதுவை முதல்வர் நாராயணசாமி, முஸ்லீம் லீக் கட்சித்தலைவர் காதர் மொய்தீன், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு அஞ்சலி செலுத்துகின்றனர். ஆனால் காங்கிரஸ் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதில் கலந்து கொள்ளவில்லை.
அவர் மறுத்துவிட்டாரா? இல்லை திமுக அழைக்கவில்லையா? என்பது பற்றி இப்போது பேசத் தேவை இல்லை! எனில் அவர் கலந்துகொள்ளவில்லை என்பது மட்டுமே இறுதி முடிவு.
இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியது,பாஜக தலைவர் அமித் ஷா வந்தால் எங்களுக்கு என்ன, அவர் வரட்டும் வந்து விட்டு போகட்டும் அதனால் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.அக்கறையும் இல்லை. அவர் வருகையினால் திமுக மற்றும் பாஜ ஆகியவை கூட்டணி வைக்க போகின்றன என்ற அர்த்தமில்லை.
அவர்கள் கூட்டனி வைத்தால்? எங்கள் கூட்டணியில் இருந்து திமுக விளகியது என்றும் பொருள் படத் தேவையில்லை. நினைவேந்தல் கூட்டத்திற்கு அமித் ஷா வந்தால் வந்து கலைஞரை பற்றி புகழ்ந்து விட்டு பேசி விட்டுப் போகிறார். அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அலட்சியமாக பதில் கூறியுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்
இந்நிலையில் திருநாவுக்கரசர் இவ்வாறு பேசியதற்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், திருநாவுக்கரசர் மீண்டும் பாஜகவுக்கே சென்றால் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.மேலும் காங்கிரஸ் கட்சியும் சிறப்பாக இருக்கும் என்றும் ஆவேசமாக பதில் கூறியுள்ளார்.
DINASUVADU
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…