மீண்டும் ” பாசிச பாஜக ஆட்சி ஒழிக ” என்ற முழக்கங்கள் நடுவே வீடு திரும்பினார் மாணவி சோபியா..!!
தூத்துக்குடி ,
நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வருகை தந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசையை விமானத்தில் வைத்து அவருக்கு எதிராக பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷமிட்டார் சோபியா என்ற பெண்மணி எனவே சோபியா மீது நடவடிக்கை எடுக்க கோரி விமான நிலைய போலீசாரிடம் பாஜக தலைவர் தமிழிசைசவுந்தராஜன் மனு அளித்தார்.இதனையடுத்து, சோபியாவை கைது செய்த போலீசார், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம் தமிழிசை முன் முழக்கமிட்ட சோபியாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் என்று உத்தரவு பிறப்பித்தது.
பின் விமானத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கமிட்ட பெண் சோபியா மீது ஜாமினில் வரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.மேலும் இவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கைதான சோபியாவின் ஜாமின் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.பின்னர் மாணவி சோபியாவுக்கு ஜாமீன் வழங்கியது தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.நிபந்தனைகள் எதுவும் விதிக்காமல் ஜாமின் வழங்கியது. மேலும் சோபியாவுக்கு அவரது பெற்றோர்கள் அறிவுரை வழங்கும் படியும் நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.பின்னர் கைதான மாணவி சோபியா ஜாமீனில் விடுதலையானார்…
நேற்று கைது செய்யப்பட்ட சிறிது நேரத்தில் சோபியாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்ட்து.இதன் காரணமாக சோபியா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று நீதிமன்றத்தின் ஜாமீன் தொடர்பான நடைமுறைகளை முடித்த நிலையில் சோபியா மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தார்.சோபியாவை வரவேற்க மக்கள் திரண்டு வந்து இருந்தனர்.சோபியா வெளியே வந்ததும் அங்கே வரவேற்க நின்ற மக்கள் பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று விண்ணதிர முழக்கமிட்டு மாணவி சோபியாவை வழியனுப்பி வைத்தனர்..