மீண்டும் சர்ச்சையை கிளப்பும் ஜெயலலிதா மரணம்..!! இறந்தது இரவு 11.30 முதல்வராக அன்று மாலையே வா…?
ஜெயலலிதா மறைந்த தினத்தின் மாலையிலேயே முதலமைச்சர் பதவி ஆளுநரின் தனிச் செயலாளர் வாக்குமூலத்தால் மீண்டும் சர்ச்சை
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த தினத்தின் அன்று மாலையிலேயே அடுத்த முதலமைச்சர் பதவி ஏற்புக்கான ஏற்பாடு நடைபெற்றதாக முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவின் தனிச் செயலாளர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவின் முதன்மை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, ஆளுநரின் உத்தரவின் பெயரில் புதிய முதலமைச்சர் பதவி ஏற்பதற்கான பணிகளை ஜெயலலிதா மறைந்த தினத்தன்று மாலையே முடித்துவிட்டோம் என ரமேஷ் சந்த் மீனா வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த சூழலில் அன்றைய தினம் மாலையே புதிய முதல்வருக்கான பணிகளை செய்ய ஆளுநர் எவ்வாறு உத்தரவிட்டார் என்பதில் ஆணையத்திற்கு பல்வேறு சந்தேங்கங்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா உடல் நிலை குறித்து மத்திய அரசுக்கு எதன் அடிப்படையில் அறிக்கை அனுப்பபட்டது என ரமேஷ் சந்த் மீனாவிடம் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
அக்டோபர் 1 ம் தேதி லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மருத்துவ அறிக்கையில் 40 சதவீதமே உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் மிகவும் அபாயகரமான நிலையில் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். அதை ஆளுநர் பார்த்த பின்பும் மேல் சிசிச்சைக்கு ஏன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை ஆணையம் எழுப்பியுள்ளது. ஆனால் முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவின் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா அந்த கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது இப்படி இன்று வரை முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான மர்மம் நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது.
DINASUVADU