மீண்டும் ஆய்வுப் பணிகளை தொடங்குகிறார் முதலமைச்சர் பழனிசாமி
மீண்டும் ஆய்வுப் பணிகளை தொடங்குகிறார் முதலமைச்சர் பழனிசாமி.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய முதலமைச்சர் பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.அதன்படி 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் முதலமைச்சர். இதனிடையே கடந்த 13-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தார்.ஆனால் முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைந்ததை அடுத்து அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் வருகின்ற 22-ஆம் தேதி புதுக்கோட்டை மற்றும் 29-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி செல்கிறார். இரண்டு மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்கிறார்.மேலும் அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் கலந்து கொள்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.