மீண்டும் ஆட்சியமைக்கும் சந்திரசேகரராவ்…! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் வாழ்த்து..!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.சத்தீஸ்கர்,மத்திய பிரதேசம் , ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.அதேபோல் தெலுங்கானாவில் சந்திரசேகரராவின் கட்சியும்,மிசோரமில் மிசோ தேசிய முன்னணியும் வெற்றி பெற்றுள்ளது.
தெலங்கானாவில் சந்திரசேகர் ராவின் ராஷ்ட்ரிய சமிதி கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. சந்திரசேகர் ராவ் சுமார் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவரும், தெலங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர ராவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைப்பதற்கு வாழ்த்து தெரிவித்தார்.