மிரட்டி எடுத்து மின்கம்பங்களை தூக்கி எரிந்த கஜா…..! 3 மாவட்டங்களுக்கு 2 நாட்களில் மின்சாரம்….!!மாலை மற்ற மாவட்டங்களுக்கு மின்சாரம்..! மின்துறை..!!
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 2 நாட்களில் மின் விநியோகம் வழங்கப்படும் என்று மின்துறை தெரிவித்துள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 3 மாவட்டங்களில் 2 நாட்களில் மின் விநியோகம் வழங்கப்படும் என்று மின்துறை அறிவித்த நிலையில் மற்ற மாவட்டங்களில் இன்று மாலையே மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மின்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை கஜா புயலால் 12 ஆயிரம் மின்கம்பங்கள், 112 துணை மின் நிலையங்கள், 495 மின் கடத்திகள், 100 மின் மாற்றிகள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவித்த மின்துறை பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு திருச்சி மற்றும் கோவையில் இருந்து கூடுதல் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
DINASUVADU