மிரட்டிய கஜா கோரதாண்டவம்…! வீடுகள்……ஆயிரம் மரங்கங்களை அடியோடு சாய்த்த கஜா..!!7 மாவட்ட இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!!
கஜாவினால் தமிழக கடலோர பகுதிகளில் சேதம் அடைந்துள்ளதாக தகவலகள் தெரிவிக்கின்றன.கரையை கடந்த நிலையில் கனமழையாக உருவெடுத்த கஜா கடலூர்,நாகை,தஞ்சாவூர்,ராமநாதபுரம்,புதுக்கோட்டை ,திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் புயலாம் பாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு புயல் கரையை கடந்த நிலையில் பலத்த சூறைக்காற்றும் தீவிரமாக விசியது.இதன் காரணமாக நேற்றே மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் கஜாவினால் இரவு தாண்டவமாடிய காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.
பாதிப்புக்குள்ளாகும் என்று அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு உள்ளிட்ட கிராமங்களில் சூறைக்காற்றின் அதன் வேகத்தில் அடித்ததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூறை தூக்கி வீசி எரியப்பட்டது மேலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தது சாலைகளில் சாய்ந்துள்ளன.இதனை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் வேதாரண்யம் அருகே பலத்த சூறைக்காற்றுடன் ஆக்ரோஷமாக கரையை கடந்தத‘கஜா’ புயல் காரணமாக மின்சாரம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு துண்டிககப்பட்ட நிலையில் 7 மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை கஜாவால் முடங்கியது.
#gajacycloneupdates
Pray For My Native ???????????? pic.twitter.com/07ANFb1YGq— HABIB DHULFIKHAR (@Habib_Dhulfik) November 15, 2018