மின் பணியாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு…ஓ.எஸ். மணியன்…!!
புயல் பாதித்த பகுதிகளில் மின் பணியாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கஜா புயல் மீட்பு பணியை தீவிரப்படுத்துவது குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, பென்ஜமின், மற்றும் ஒ.எஸ். மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இயல்புநிலை விரைவாக திரும்ப உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ஒவ்வொரு நாளும் மின் பணியாளர்களின் எண்ணிக்கைகள்
அதிகரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
dinasuvadu.com