மின்சார வாரிய ஊழியர்கள் பிப்.1 ஆம் தேதி வேலை நிறுத்தம் அறிவிப்பு!

Default Image

மின்சார சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை கண்டித்து தமிழக மின்சார வாரிய ஊழியர்கள் பேரணி மற்றும் வேலை நிறுத்தம் அறிவிப்பு.

மத்திய அரசானது,2003 ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்வதற்கான புதிய திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது.இதற்கான,உத்தேசித்திருக்கும் புதிய மின்சார சட்டத் திருத்தத்திற்கான வரைவு ஏற்கனவே கடந்த ஆண்டில் வெளியிடப்பட்டது.

ஆனால்,இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தம்,தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், பொதுத்துறை நிறுவனங்களை பாதிக்கும் வகையிலும் இருப்பதோடு, மாநில அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளில் தலையிடுவதாகவும் உள்ளதால்,இந்தச் சட்டத் திருத்த முன்வடிவினை திரும்பப் பெறுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நேற்று (8-12-2021) கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில்,மின்சார சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை கண்டித்து தமிழக மின்சார வாரிய ஊழியர்கள்,பிப்ரவரி 1 ஆம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில்,டிசம்பர் 15 ஆம் தேதி டெல்லியை நோக்கி பேரணியும்,அதே நாளில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், சேப்பாக்கத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்