ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி தேர்தல் இரு கட்டங்களாக நடந்து முடிந்தது.தேர்தலில் கட்சி அடிப்படையில் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான போட்டியில் மொத்தம் 515 இடங்களில் கூட்டணிகளோடு நான்கு முனைப் போட்டி நிலவிய நிலையில் தற்போது அதற்கான முடிவுகள் வெளியீடப்பட்டுள்ளது, அதில் அதிமுக கூட்டணி மொத்தம் 435 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்டது. இதில் 214 பதவிகளைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியுள்ளது.
மறுபக்கம் சமபலத்துடன் அதிக்கம் செலுத்தி வந்த திமுக மொத்தம் 416 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்டது.அதில் 243 பதவிகளைக் கைப்பற்றி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தேர்தலில் தனித்து களம் இறங்கி அமமுக 498 இடங்களில் போட்டியிட்டது.ஆனால் ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவியையும் வெல்லவில்லை. அதே போல தனித்து களம் இறங்கி 364 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியும் ஒரு இடத்தைக்கூட கைப்பற்றவில்லை. தமிழக பாஜக மொத்தம் 81 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்டது இதில் 7 இடங்களைக் கைப்பற்றி வெற்றிக்கனியை ருசித்துள்ளது. தமிழக காங்கிரஸ் இந்த பதவிக்காக 74 இடங்களில் போட்டியிட்டது.அதில் 15 இடங்களை கைப்பற்றி உள்ளது.அதே போல் 10 இடங்களில் போட்டியிட்ட மதிமுக 1 இடத்தை கைப்பற்றியுள்ளது.22 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களில் வென்று உள்ளது.23 இடங்களில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் 7 இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளது, 36 இடங்களில் போட்டியிட்ட பாமக 16 இடங்களில் வெற்றி கண்டுள்ளது. 24 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.இதே போல் 3 இடங்களைக் கைப்பற்றி உள்ளது தேமுதிக மற்றும் 6 இடங்களில் போட்டியிட்ட தமாகா 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.மேலும் சுயேட்சைகள் 3 பேர் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலராக ஆகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…