மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான மொத்தம் -515ல்.,513 இடங்களுக்கு அதிகாரபூர்வ வெற்றி அறிவிப்பு..!

Default Image
  • ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்கள் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியீடப்பட்டு வருகின்றன.
  • மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான மொத்தம் 515 இடங்களில் 513 இடங்களுக்கு தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி தேர்தல் இரு கட்டங்களாக நடந்து முடிந்தது.தேர்தலில் கட்சி அடிப்படையில் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான போட்டியில் மொத்தம் 515 இடங்களில் கூட்டணிகளோடு  நான்கு முனைப் போட்டி நிலவிய நிலையில் தற்போது அதற்கான முடிவுகள் வெளியீடப்பட்டுள்ளது, அதில் அதிமுக கூட்டணி மொத்தம் 435 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்டது. இதில் 214 பதவிகளைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியுள்ளது.

மறுபக்கம் சமபலத்துடன் அதிக்கம் செலுத்தி வந்த  திமுக மொத்தம் 416 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்டது.அதில் 243 பதவிகளைக் கைப்பற்றி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தேர்தலில் தனித்து களம் இறங்கி  அமமுக 498 இடங்களில்  போட்டியிட்டது.ஆனால் ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவியையும் வெல்லவில்லை. அதே போல தனித்து களம் இறங்கி 364 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியும் ஒரு இடத்தைக்கூட கைப்பற்றவில்லை. தமிழக பாஜக மொத்தம் 81 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்டது இதில் 7 இடங்களைக் கைப்பற்றி வெற்றிக்கனியை ருசித்துள்ளது. தமிழக காங்கிரஸ் இந்த பதவிக்காக 74 இடங்களில் போட்டியிட்டது.அதில்  15 இடங்களை கைப்பற்றி உள்ளது.அதே போல்  10 இடங்களில் போட்டியிட்ட மதிமுக 1  இடத்தை கைப்பற்றியுள்ளது.22 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களில் வென்று உள்ளது.23 இடங்களில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட்  7 இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளது, 36 இடங்களில் போட்டியிட்ட பாமக  16 இடங்களில் வெற்றி கண்டுள்ளது. 24 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.இதே போல் 3 இடங்களைக் கைப்பற்றி உள்ளது  தேமுதிக மற்றும் 6 இடங்களில் போட்டியிட்ட தமாகா  1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.மேலும் சுயேட்சைகள்  3 பேர் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலராக ஆகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்