மார்கழி முதல் நாளான நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது..!!
மார்கழி மாதம் நேற்று பிறந்ததையொட்டி அதிகாலையிலேயே ஏராளமானோர் கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.
தமிழ் மாதங்களில் மிகவும் புனிதமான மாதமாக மார்கழி பார்க்கப்படுகிறது.இது வருடத்தின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதமானது தனுர் மாதம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த மாதம் முழுவதும் அதிகாலையிலே எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி வீட்டின் வாசலில் வண்ணக் கோலம் இட்டு இறைவனை வழிபாடு செய்வது வழக்கம் அது மட்டுமல்லாமல் திருப்பாவை,திருவெம்பாவை இசைக்கப்படும் .மேலும் கிருஷ்ண பராமாத்மா மாதங்களின் நான் மார்கழியாக இருக்கிறேன் என்றார் இந்நிலையில் இம்மாதத்தில் கோவில்களில் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றது.