மாநிலங்களவையில் திமுக போராட்டம் நடத்தும்: ஸ்டாலின்..!எதற்கு..!
உயர்கல்வி ஆணையம் அமைப்பது சீர் திருத்தம் அல்ல, சீரழிவு தான். அதிகாரங்கள் மூலமாக, மத்திய அரசு சமஸ்கிருதம், இந்தி திணிப்பு முயற்சிகளில் ஈடுபட முயலும். கல்வி நிறுவனங்களின் அதிகாரங்களை ரத்து செய்யும் அதிகாரமும் இந்த ஆணையத்திற்கு வழங்கப்பட்டிருப்பதால், எதிர்ப்பு தெரிவிக்க முடியாத நிலை ஏற்படும்உயர்கல்வி ஆணையம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
யுஜிசியை கலைத்துவிட்டு உயர்கல்வி ஆணையம் அமைக்கும் முடிவு கண்டனத்துக்கு உரியது என்றும் , மாநில கட்சிகளின் ஆதரவை திரட்டி மாநிலங்களவையில் திமுக போராட்டம் நடத்தும். மேலும் உயர்கல்வி ஆணையம் அமைந்தால் மாநிலங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு மூடுவிழா காணும் கொடுமை ஏற்படும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.