மாணவி சோபியாவுக்கு ஜாமின்..! வழங்கியது தூத்துக்குடி நீதிமன்றம்..!!
பாசிச பாஜக ஒழிக என்று முழக்கமிட்டதால் கைதான மாணவி சோபியாவுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.மேலும் நாட்டின் மீது அக்கறை இருப்பது அவசியம்தான் என்றும்,பொது இடங்களில் இனி இது போன்று பேசக்கூடாது என மாணவி சோபியாவுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.மாணவி சோபியாவுக்கு அறிவுரை வழங்குமாறு அவருடைய தந்தைக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக அரசை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை முன்பு பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷமிட்டார் இதனால்3 பிரிவுகளில் கைது செய்யப்பட்டமாணவி சோபியா இரவு தூத்துக்குடி மாஜிஸ்ரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு பின் 15 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டபட்ட நிலையில்அவருக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது
DINASUVADU