மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம்:பேராசிரியை நிர்மலா தேவிக்கு 5 நாள் சிபிசிஐடி காவல் வழங்கி சாத்தூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published by
Venu

நிர்மலா தேவியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு சாத்தூர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

சாத்தூர் நீதிமன்றத்தில், மாணவிகளை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிபிசிஐடி போலீசார் பேராசிரியை நிர்மலா தேவியை 7 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்தனர்.

மாணவிகளை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாக பேராசிரியை நிர்மலா தேவி மீது எழுந்துள்ள புகார் தொடர்பாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி நிர்வாகிகளிடம் சிபிசிஐடி போலீசார் நேற்று தீவிர விசாரணை நடத்தினர். சிபிசிஐடி போலீசார் அளித்த மனுவை ஏற்று இந்த வழக்கு, அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் இருந்து, விருதுநகர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விருதுநகர் சிபிஐசிஐடி அலுவலகத்திற்கு, தேவாங்கர் கல்லூரியின் தலைவர் ஜெயசூரியன், துணைத் தலைவர் சங்கரலிங்கம் மற்றும் கல்லூரி செயலர் உள்ளிட்டோர், அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் சிபிசிஐடி எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். கல்லூரியில் நிர்மலாதேவியின் நடவடிக்கைகள் என்ன? அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

சிபிசிஐடியின் மற்றொரு குழு அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரிக்கு சென்று கல்லூரியின் பிற நிர்வாகிகள், ஊழியர்கள் பேராசிரியர், மாணவிகள் உள்ளிட்டோரிடம் நேற்று விசாரணை நடத்தினர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும் சென்று விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும் மதுரை காமராஜர் பல்கலைகழகத் துணைவேந்தர் செல்லத்துரையிடமும் சிபிசிஐடி போலீசார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நேற்று விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே பேராசிரியை நிர்மலா தேவியை தங்கள் காவலில் எடுத்து 7 நாட்கள் விசாரிக்க அனுமதி கேட்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.இந்நிலையில் சாத்தூர் நீதிமன்றத்தில் பேராசிரியை நிர்மலாதேவியை ஆஜர்படுத்தியது போலீஸ்.சாத்தூர் நீதிமன்றத்துக்கு நிர்மலாதேவியை போலீஸ் அழைத்து வந்தபோது பெண்கள், வழக்கறிஞர்கள் கோஷம் எழுப்பினர்.

தற்போது   நிர்மலா தேவியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு சாத்தூர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

சமூக ஆர்வலர் லாரி ஏற்றிப் படுகொலை! கடும் கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி!

சமூக ஆர்வலர் லாரி ஏற்றிப் படுகொலை! கடும் கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி!

சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்தார். இது விபத்தா?…

9 minutes ago

Live : விஜயின் பரந்தூர் பயணம் முதல்… அமெரிக்க அதிபராகும் டொனால்ட் ட்ரம்ப் வரை…

சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…

48 minutes ago

பண மோசடி வழக்கு! ஷகிப் அல் ஹசனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…

1 hour ago

ஒரிஜினலா? டூப்பா? பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படத்தால் எழுந்த ‘புதிய’ சர்ச்சை!

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…

2 hours ago

பிக் பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன்! மற்றவர்களுக்கு என்னென்ன விருதுகள் தெரியுமா?

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…

3 hours ago

கோ கோ உலக கோப்பைகளை வென்ற இந்தியா அணிகள்! பிரதமர் மோடி பாராட்டு!

டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…

3 hours ago