மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவி வீட்டை விட்டு வெளியே வர மறுத்து உள்ளேயே பதுங்கல்!

Published by
Venu

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி,மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த,நிலையில் அவரை கைது செய்ய போலீசார் அவரது வீட்டு முன் முகாமிட்டுள்ள நிலையில், வீட்டை விட்டு வெளியே வர நிர்மலா மறுத்து உள்ளேயே பதுங்கியுள்ளார்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியின் கணிதப் பேராசிரியையான நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்காக 4 மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி தவறான பாதைக்கு அழைத்த ஆடியோ வெளியானதால், நிர்மலா தேவி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் கண்டனக் குரல்கள் எழுந்தது.

இன்று காலை தேவாங்கர் கல்லூரி முன்பாக மகளிர் அமைப்புகளும், மாணவர் அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து கல்லூரிக்கு சென்ற வட்டாட்சியர், ஏ.டி.எஸ்.பி. மதி, டி.எஸ்.பி. தனபால் உள்ளிட்டோர் பேராசிரியை மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விசாரணை நடத்தினர். அதன் பின்னர் கல்லூரி முதல்வர் பேராசிரியை நிர்மலா தேவி மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஏ.டி.எஸ்.பி. மதி தலைமையிலான போலீசார் அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டிற்கு சென்றனர். அங்கு சென்று பேராசிரியையிடம் விசாரணை நடத்த முற்பட்ட போது, வீட்டுக்குள் இருந்து நிர்மலா தேவி வெளியே வர மறுத்துவிட்டார். இதனால் நிர்மலா தேவியின் உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டு அங்கு வருமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். அந்த உறவினர் வந்த பிறகு நிர்மலா தேவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் நிர்மலா தேவி வீடு முன்பு போலீசார் முகாமிட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

அதிமுக கருப்பு சட்டை அணிந்து வந்த போது கோபம் இல்லை சிரிப்புதான் வந்தது – மு.க.ஸ்டாலின்!

அதிமுக கருப்பு சட்டை அணிந்து வந்த போது கோபம் இல்லை சிரிப்புதான் வந்தது – மு.க.ஸ்டாலின்!

சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…

32 minutes ago

பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கை விசாரிக்க 7 தனி சிறப்பு நீதிமன்றம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…

50 minutes ago

“இந்திய அணியின் ராணி” ஸ்மிருதி மந்தனா படைத்த புது சாதனை!

குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக  3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…

2 hours ago

கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?

டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…

3 hours ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…

4 hours ago

“வாய் இருக்குனு ஏதேதோ பேச கூடாது”…சீமான் பேச்சுக்கு பிரேமலதா கண்டனம்!

சென்னை :  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

4 hours ago