நீதிமன்றத்தில், மாணவிகளை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிபிசிஐடி போலீசார் பேராசிரியை நிர்மலா தேவியை 7 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
மாணவிகளை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாக பேராசிரியை நிர்மலா தேவி மீது எழுந்துள்ள புகார் தொடர்பாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி நிர்வாகிகளிடம் சிபிசிஐடி போலீசார் நேற்று தீவிர விசாரணை நடத்தினர். சிபிசிஐடி போலீசார் அளித்த மனுவை ஏற்று இந்த வழக்கு, அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் இருந்து, விருதுநகர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விருதுநகர் சிபிஐசிஐடி அலுவலகத்திற்கு, தேவாங்கர் கல்லூரியின் தலைவர் ஜெயசூரியன், துணைத் தலைவர் சங்கரலிங்கம் மற்றும் கல்லூரி செயலர் உள்ளிட்டோர், அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் சிபிசிஐடி எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். கல்லூரியில் நிர்மலாதேவியின் நடவடிக்கைகள் என்ன? அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
சிபிசிஐடியின் மற்றொரு குழு அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரிக்கு சென்று கல்லூரியின் பிற நிர்வாகிகள், ஊழியர்கள் பேராசிரியர், மாணவிகள் உள்ளிட்டோரிடம் நேற்று விசாரணை நடத்தினர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும் சென்று விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும் மதுரை காமராஜர் பல்கலைகழகத் துணைவேந்தர் செல்லத்துரையிடமும் சிபிசிஐடி போலீசார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நேற்று விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே பேராசிரியை நிர்மலா தேவியை தங்கள் காவலில் எடுத்து 7 நாட்கள் விசாரிக்க அனுமதி கேட்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறும ்போது நீதிமன்றத்தில் நிர்மலாதேவி ஆஜர்படுத்தப்படுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…