மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம்:பேராசிரியை நிர்மலாதேவி தொடர்பாக இன்று சந்தானம் குழு விசாரணை!
அருப்புக்கோட்டையில் சந்தானம் குழு, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக, இன்று விசாரணை நடத்துகிறது.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, பல்கலைக்கழக உயர்பொறுப்புகளில் உள்ளவர்களுக்காக மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து விசாரிக்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் என்பவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். சந்தானத்திற்கு உதவியாக, பேராசிரியைகள் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்துவதற்கு வசதியாக அன்னை தெரசா கல்லூரி பேராசிரியை கமலி, வேளாண் பல்கலைக் கழக பேராசிரியை ஒருவர் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று இக்குழு மதுரையில் காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளரிடம் விசாரணை மேற்கொண்டது. தொடர்ந்து இன்று, சந்தானம் மற்றும் 2 பெண் அதிகாரிகள் அருப்புக்கோட்டையில் விசாரணையை மேற்கொள்கின்றனர்.
இதனிடையே, பேராசிரியை நிர்மலா தேவியை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது. இதற்காக நீதிமன்றத்தில் நிர்மலா தேவி ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.