விசாரணை அதிகாரி சந்தானம் ,பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், தேவைப்பட்டால் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மதுரை மத்திய சிறையில் நிர்மலா தேவியிடம் நேற்று விசாரணை நடத்திய சந்தானம் குழுவினர், பின் செய்தியாளர்களைச் சந்தித்தனர். விசாரணைக்கு நிர்மலாதேவி முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக கூறிய சந்தானம், இன்று தேவாங்கர் கல்லூரி செயலாளர் மற்றும் சிலருடன் விசாரணை நடத்தப்படும் என்றார். பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோரிடமும் விசாரணை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் ஆராய்ச்சி மாணவரான கருப்பசாமியை 4 நாட்கள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு சாத்தூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட கருப்பசாமியிடம் நேற்றே விசாரணையை தொடங்கினர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், காமராஜர் பல்கலைக்கழக புத்தாக்க பயிற்சி இயக்குனர் கலைச்செல்வன், தொலைதூரக் கல்வி இயக்குனர் விஜயதுரையை, சிபிசிஐடி போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். மேலும் சில முக்கிய அதிகாரிகளை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரவும் சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…